இந்த உலகம் உருவானபோது எவ்வளவு தண்ணீர் இருந்ததோ அதே அளவு தண்ணீர் தான் இன்றும் உள்ளது.
இதில் எந்த மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
எனவே உலகைவிட்டு தண்ணீர் எங்கே யும் போகவில்லை போகவும் முடியாது.
அப்படி ஆனால் ஏன் இப்போது தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. ஏன் பல உயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை.
ஒளவையார் காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்தது. இப்போது ஒருமுறையாவது பெய்கிறதா என்றால் அது இல்லை. இதுவே மூலக காரணம்.
ஒருபுறம் ஜனத்தொகை அதிகரிப்பு மற்றொரு புறம் மழை பெய்வதில்லை.
எனவே மழையை திரும்பவும் மும்மாரி பெய்ய தேவையான காடுகளை மீண்டும் புதிப்பித்தால் இப்பிரச்சினை யில் இருந்து விடுபடலாம். நன்றி