கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே சமயம், மொத்த பூமியில் 70 சதவீத அளவுக்கு தண்ணீரால் நிரம்பியது என்றாலும் கூட, அவை அனைத்துமே குடிப்பதற்கு உகந்த நீர் அல்ல. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையே காணப்படுகிறது. நமது உடலில் ஏறத்தாழ 70 சதவீதம் அளவுக்கு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாகவும், வியர்வை மூலமாகவும் வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து உதவிகரமாக இருக்கிறது
நமது மூட்டுகளில் லூப்ரிகேஷன் அளிக்கவும், உடலில் உணர்வுகளை அதிகரிக்கவும் தண்ணீர் உதவிகரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக 8 கிளாஸ் தண்ணீர் அருந்துவது உடலுக்கு போதுமானதாக இருக்கும் என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்படுகிறது. போதுமான அளவுக்கு நீங்கள் தண்ணீர் அருந்தவில்லை என்றால் உடல் உஷ்ணம் கட்டுப்பாடான அளவில் இருக்காது.